டிவியில் லீட் ரோலில் நடித்து வந்த மச்ச நடிகைக்கு சினிமாவில் ஹீரோயினாக வலம் வர வேண்டும் என ஆசை, அந்த ஆசைக்கு தடையாக இருந்த கணவரை காரணமே இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்தார். இதையடுத்து, டிவி நிகழ்ச்சியில் மச்ச நடிகைக்கு அழைப்பு வர அதிலும் கலந்து கொண்டு பெயர் எடுத்தார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான், மச்ச நடிகைக்கு ஒரு சில படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் இந்த மச்ச நடிகையை சந்தித்து, தான் ஒரு படத்தை இயக்க போகிறேன். அந்த படத்தில் நீ தான் ஹீரோயின். இந்த படம் வெளியில் வந்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்ல, அந்த மச்ச நடிகையும் ஓகே சொல்லி இருக்கிறார்.
கவர்ச்சி ஆட்டம்:
அது மட்டுமில்லாமல், அந்த தயாரிப்பாளர் தன்னிடமும், ஹீரோவிடமும் கொஞ்சம் அனுசரித்து போனால் போதும் என்று சொல்ல, அதற்கு மச்ச நடிகை ஓகே சொல்லி படப்பிடிப்பும் தொடங்கி நடந்தது. அப்போது, மச்ச நடிகைக்கு ஒரு பக்கம் ஹீரோ, ஒரு பக்கம் தயாரிப்பாளர் என தினமும் டார்ச்சர் செய்ததால், அந்த நடிகை நான் படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று சொல்ல, கடுப்பான தயாரிப்பாளர் , பாதி படம் எடுத்த பிறகு இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என்று கேட்க, அந்த மச்ச நடிகை இனி மேல் என்னால், அட்ஜஸ்ட்மென்ட் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போக அது பெரிய சண்டையாக மாறி இருக்கிறது. இந்த நேரம் மச்ச நடிகையின் பிறந்த நாள் வர, அந்த தயாரிப்பாளர் மச்ச நடிகை, ஓவர் கர்ச்சியாக நடித்த போட்டோவை போட்டு வாழ்த்து கூறினார்.
கதவை தட்டிய நடிகர்:
இதனால், மச்ச நடிகையின் மானம் தெருவிற்கு வந்து விட, தொடர்ந்து நடிக்கவில்லை என்றால், இன்னும் பலான போட்டோ வெளியே வரும் என சொல்ல, பயந்து போன மச்ச நடிகை, மீண்டும் படத்தில் நடிக்கிறேன். ஆனால், ஹீரோ என்னை டார்ச்சர் செய்யக்கூடாது, உங்களுக்கு மட்டும்னா ஒகே என்று சொல்ல, தயாரிப்பாளரின் சரி, நான் ஹீரோவிடம் பேசி விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த ஒப்பந்தந்தின் பேரில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்க, ஒரு கட்டத்தில் மச்ச நடிகை பார்த்து கடுப்பான அந்த ஜிம்பாடி நடிகர், நள்ளிரவில் நடிகையின் அறையின் கதவை தட்டி, தகாத வார்த்தையில் பேசி இருக்கிறார். இதனால், அந்த நடிகை அன்று இரவே விஷயத்தை தயாரிப்பாளரிடம் சொல்லிவிட்டு படத்தை விட்டு விலகிவிட்டார்.
ச்சீ என்ன இது:
அதே போல அந்த ஜிம்பாடி நடிகரும் தயாரிப்பாளர் எனக்கு சம்பளமே தரவில்லை என ஒரு செய்தியை சொல்லிவிட்டு படத்தில் இருந்து விலகினார். இதனால், கடுப்பான தயாரிப்பாளர், அந்த மச்ச நடிகையின் ஒட்டுமொத்த கவர்ச்சி ஆட்டத்தையும் படத்தில் வைத்து படத்தை வெளியிட்டு, மச்ச நடிகையின் மொத்த இமேஜையும் டேமேஜ் ஆக்கிவிட்டார். தற்போது அந்த நடிகையின் படத்தைப்பார்த்த ரசிகர்கள் ச்சீ... பணத்திற்காக இப்படியா என அந்த நடிகையை திட்டிதீர்த்து வருகின்றனர்.
